இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்போது சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சூர்யாவின் 44 வது படமான இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “ரெட்ரோ படம் நன்றாக வந்திருக்கிறது.
போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர் வெளியான போது அனைவரும் தலைவர் ரஜினிகாந்தின் குறியீடு இருப்பதாக கூறினர். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.