”அரசியல் ஞானம் இல்லாத புஸ்ஸி ஆனந்தை உடன் வைத்துக்கொண்டால் தவெகவையும், விஜயையும் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அக்கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ”தலைவரின் கொடியை அன்று முதல் இன்று வரை யார் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ உழைத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குதான் பதவி கிடைக்கும்.
மற்ற கட்சியில் இருந்து பெரிய பெரிய கார்களில் வருகிறார்களே, நமக்கு பதவி கிடைக்குமா என யாரும் நினைக்க வேண்டாம். பெரிய கார்களில் வந்தாலும் சரி, ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி… மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பதவி கிடைக்காது. அன்று முதல் இன்று வரை சைக்கிள் ஓட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டர்களுக்குத்தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பதவி வழங்கப்படும்.
ஆகையால் யாரும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உழைத்தவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும்” எனப்பேசியது சர்ச்சையாகி இருகிறது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது. இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
இதுகுறித்து தவெக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”இந்த கட்சி எப்படி முன்னுக்கு வரும், டெவலப் ஆகும் விஜய் அவர்களே… தயவு செய்து உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். அறிவார்ந்த அரசியல்வாதிகளை கையில் எடுத்து உங்கள் கட்சியை நடத்துங்கள். மக்கள் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள். ஆனால் அறிவார்ந்தவர்கள் கூட இல்லையென்றால் கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் போய்விடும். கண்டிப்பாக டெபாசிட் போய்விடும். இங்கு இருக்கும் எல்லோரும் படித்தவர்கள். அருகில் இருப்பவர் டாக்டர் பட்டம் வாங்கியவர். நான் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தேன்.
ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்றால் பொறுப்பு வாங்கும் போதே பணம் வாங்கிக்கொண்டு எப்படி பொறுப்புகளை கொடுக்க முடியும். அதுவும் எண்ணற்ற இளைஞர்கள் விஜய்யை நம்பி வருகிறார்கள். 50,000 ரூபாய் கொடு, ஒரு லட்சம் ரூபாய் கொடு எனக் கேட்கிறார்கள். ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் நகர மன்ற தலைவருக்கு கேட்டார்கள். அதை நாங்கள் மீடியாவிற்கு கொண்டு போகவில்லை. இந்த விஷயத்தை யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் தான் இந்த விஷயத்தை வெளியே சொன்னோம் என தலைமை வரை சென்று எங்களை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கிறார்கள்.
மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது. இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.