Homeசெய்திகள்இந்தியாஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி... துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

-

- Advertisement -

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் அண்மையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அந்தப் பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனை கண்டு அருகில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலர் ஓருவர் விரைந்து சென்று அந்த் பெண் பயணியை வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம் ஓடும் ரயிலில் இருந்து ஏறவோ, இறங்கவோ கூடாது என்று பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

 

MUST READ