Homeசெய்திகள்கட்டுரைஎம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!

எம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!

-

- Advertisement -

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தோம் என்றால் தென்னிந்திய மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கு பல மடங்கு அதிக எம்.பிக்கள் கிடைப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென் மாநில எம்.பிக்கள் இன்றியே அவர்கள சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சியினரையும் கூட்டி, அவர்களது கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் சில தீர்மானங்களை நிறைவேற்றினார். அந்த தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் திமுகவை சேர்ந்த எம்.பி-க்கள் பேச வேண்டும் என திமுக எம்பிக்கள் உடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே ஜனநாயகம் தான். மாநிலங்களுக்கு உரிமைகள் பறிக்கப்படும் போது, நாம் கேள்வி எழுப்புவதை எப்படி அரசியலமைப்புக்கு எதிரானது என்று எப்படி சொல்ல முடியும்?. மாநில அரசுகள் மத்திய அரசின் அனைத்து சட்டங்களையும் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. மத்திய அரசின் சட்டங்கள் தவறாக இருந்தால், மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு தொடருவதற்கு உரிமை உள்ளது. அவ்வாறு செய்யும்போது அதை தவறு என்று சொல்வது ஏன்?  திமுகவினர் அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள். அவர் மாநில உரிமைகளை, மாநில சுயாட்சியை இங்கே ஆழமாக கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அதனுடைய பலன்களை நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

கடந்த 5 அல்லது 10 வருடங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எடுத்து பார்த்தோம் என்றால், கூட்டாட்சி தத்துவம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை என்று சொல்லி இருக்கிறார்கள். கூட்டாட்சி தத்துவமா? அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் நிறைந்த Quasi federalism-மா? என்கிற விவாதம் நிறைய தீர்ப்புகளில் சொல்லப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கியதால், மாநிலங்களை எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக பார்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. மாநிலங்கள் தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு சுயாட்சியை நிர்ணயம் செய்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து பாதுகாப்புகளும் உள்ளன. அதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என சொல்கிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. அப்படி என்றால் 1976ல் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு 25 வருடங்களுக்கு தள்ளி வைத்ததோ, அல்லது வாஜ்பாய் 25 வருடங்களுக்கு தள்ளி வைத்ததையோ அவர்கள் அரசியலமைப்புக்கு விரோதமானது  என்று சொல்கிறார்களா? அப்போதும் அரசியலமைப்புச் சட்டம் அதே தானே இருந்தது. சமநிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்து தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைத்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் சமநிலை வந்து விட்டதா? என்பதுதான் எங்கள் கேள்வி. சமத்துவமாக எங்களுக்கு அதிகாரம் அதிகாரத்தை பகிர்ந்து தரப்போகிறீர்களா? என்பதுதான் கேள்வி.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தின் படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று சட்டம் கூறுகிறது. 1976ல் இருந்து வாஜ்பாய் காலம் வரை மக்கள் தொகையை  அடிப்படையாக கொண்டு தொகுதியை மறுசீரமைத்தால் சமநிலை உருவாக்க முடியாது என்று உணர்ந்திருந்தனர். ஏன் என்றால் 1971ல் மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட போது தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்கள். அதன் காரணமாக தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆனால் தமிழகம் எதிர்பார்த்ததை விட 1.8 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் உ.பி. 2.4 சதவீதம், பீகார் 3 சதவீதமாக வைத்துள்ளனர். மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாக கொண்டால் பாஜகவினர் சொல்வது போல இங்கே தொகுதிகள் குறையாமல் போகலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு உரிய தொகுதிகளை விட அதிகமாக வரும்.

அதன்படி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய 39 தொகுதிகளில், 10 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உ.பிக்கு தற்போது 80 தொகுதிகள் உள்ள நிலையில், அவர்களுக்கு கூடுதலாக 100 தொகுதிகள் கிடைக்கும். இந்த கணக்கீடு சரியானதா? இந்த முறை ஏன் சரியானது இல்லை என்றால்? நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை வேண்டும். வடமாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் அதிக எம்.பிக்கள் இருந்தார்கள் என்றால், அனைத்து முடிவுகளையும் அவர்கள்தான் எடுப்பார்கள். தென் மாநிலங்களில் உள்ள எம்.பி-க்களின் எண்ணிக்கையையும், வடமாநிலங்களில் குறிப்பிட்ட சில மாநில எம்.பிக்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தேம் என்றால், வடமாநிலத்தவர்களே பெரும்பான்மையில் இருப்பார்கள். அப்போது தென் மாநிலங்களின் குரலை கேட்காமலேயே அவர்கள் சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கலாம். வடக்கு, தெற்கு என்கிற பிரச்சினையை நாங்கள் எழுப்பவில்லை. சட்டத்தில் இருக்கும் யெளிவு சுழீவுகளை பயன்படுத்தி தெற்கை மேலும் அழுத்த முயற்சிக்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ