இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்து இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வட சென்னை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ஆண்ட்ரியா, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்தது வடசென்னை 2 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
“If we start #Vadachennai2 there won’t be this much hype😁. The updates which everyone are asking about the film, gives more hype😀. It will come soon⌛🔥”
– VetriMaaran pic.twitter.com/tGabINPgKv— AmuthaBharathi (@CinemaWithAB) March 9, 2025
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் ரசிகர்கள் வடசென்னை 2 படம் குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு வெற்றிமாறன், “வட சென்னை 2 படத்தை ஆரம்பித்தால் கூட இந்த அளவிற்கு ஹைப் இருக்காது. இது குறித்த அப்டேட்டை எல்லோரும் கேட்கும்போதுதான் ஹைப் அதிகமாகிறது. வடசென்னை 2 விரைவில் வரும்” என்று தெரிவித்துள்ளார்.