HomeBreaking News'ஜெயிலர் 2' படப்பிடிப்பு ஆரம்பம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு ஆரம்பம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

-

- Advertisement -

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஆரம்பம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2023ல் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டைய கிளப்பியது. அதாவது ரஜினி, நெல்சன் ஆகிய இருவருக்குமே இந்த படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 10) தொடங்கப்பட்டிருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஆரம்பம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

நடிகர் ரஜினி தன்னுடைய சினிமா பயணத்தில் இதுவரை எந்த பார்ட் 2 படத்திலும் நடித்ததில்லை. ஆனால் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த அளவிற்கு ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ரஜினிக்கும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. மேலும் இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படத்தில் சம்பவம் செய்ததைப் போல் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் தரமான சம்பவம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்தது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ