திராவிட முன்னேற்றக் கழகத்தினை மாற்றாரும் வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு சூழல் நிலவுகிறது என்றால் எங்களை இயக்குகின்ற தமிழக முதல்வருக்கே எல்லாப் புகழும் சொந்தம்-அமைச்சர் சேகர் பாபு பெறுமிதம்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி சாலை நாராயணன் தெரு ,வரதராஜன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அன்னம் தரும் அமுத கரங்கள் மூலம் காலை உணவுகள் வழங்கப்பட்டது .இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு அவர் தொகுதியில் சிறப்பாக செயல்படுவது போல் நீங்களும் செயல்பட வேண்டும் என பேசிய எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து குறித்த கேள்விக்கு , “தமிழக முதல்வர் அன்புத் தலைவர் உயிரினும் மேலான எங்கள் மக்கள் போற்றும் முதல்வர் தலைமையிலே இருக்கின்ற ஒவ்வொரு செயல் வீரனும் 100 சதவிகிதம் களத்திலே நிற்பான்.
மக்களோடு பயணிப்பான், மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் அவங்களுடைய உரிமைகளையும் பெற்று தருவதில் களத்திலே நிற்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினை மாற்றாரும், வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு சூழல் நிலவுகிறது என்றால் எங்களை இயக்குகின்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு எல்லாப் புகழும் சொந்தம்” என தெரிவித்துள்ளாா்.
திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!