சினிமா பாணியில் திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்.
பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அருகே தாமோதரன் என்பவரிடம் வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருவர் தம்பி ஓடினர்.
இது குறித்து, தாமோதரன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, திருநின்றவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநர் இருவரும் திருடர்கள் தப்பி சென்ற வழியே தேடிச் சென்றனர்.
அப்போது திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் மற்றொரு நபரிடம் பெட்ரோல் பங்கிற்கு வழி கேட்பது போல் இருவரும் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட போது காவல் ஆய்வாளர் மடக்கிப் பிடித்தார்.
போலீசாரை கண்ட இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓட தொடங்கினர். இருவரையும் விடாமல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர் பூபதி ஆகியோர் விரட்டி சென்று இருவரில் ஒருவரை பிடித்தனர்.
பிடிபட்ட நபர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபக் குமார்/20 என்பதும் இவன் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது.
தீபக் இடம் இருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.