நடிகர் ஜீவா இயக்குனர் அட்லீ குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் தெறி, மெர்சல், பிகில், ஜவான் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜீவா, அட்லீ இயக்கியிருந்த ராஜா ராணி படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் ராஜா ராணி. இந்த படம் மூன்று விதமான காதலையும், காதல் தோல்விக்கு பின் இருக்கும் இன்னொரு வாழ்க்கையையும் பற்றி கூறியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
Jiiva Recent Interview
– When #Jiiva was asked to do the story for #RajaRani, #Atlee told it to another producer and #Arya agreed.
– After that, Jiiva acted in a film produced by Atlee.#A6 #Atlee6
pic.twitter.com/NP2uHMPVWy— Movie Tamil (@MovieTamil4) March 10, 2025
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய நடிகர் ஜீவா, “ராஜா ராணி பட கதையில் நான்தான் நடிக்க இருந்தேன். கிட்டத்தட்ட கதை சொல்ல வேண்டிய நேரத்தில் அட்லீ என்னை தொடர்பு கொண்டு வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆர்யாவை வைத்து இந்த படத்தை பண்ண போகிறேன் என்று சொன்னார். நானும் ஓகே என்று சொன்னேன். அதன் பிறகு விஜய் படங்கள், பாலிவுட் என அட்லீ பிஸியாகிவிட்டார். இதற்கிடையில் அட்லீயின் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.