போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோஜிதமாக விரைந்து செயல்பட்டு மூதாட்டியின் கையை பிடித்து நிறுத்தி விபத்தை தடுத்தாா். கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் அவர்கள் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அதை சற்றும் கவனிக்காத வயதான மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடக்கும் முற்பட்டபோது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோஜிதமாக விரைந்து செயல்பட்டு மூதாட்டியின் கையை பிடித்து நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு மூதாட்டி காப்பாற்றப்பட்டார்.
இதை அடுத்து மூதாட்டியின் கையைப் பிடித்து பத்திரமாக சாலையை கடக்க செய்து உதவி ஆய்வாளர் அனுப்பி வைத்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி மேலும் பொறுப்புடன் கடமை மேற்கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதிய நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு