தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.
தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியில்2018 ஆண்டு சேர்ந்தார். இவர் CBSE பள்ளியில் படித்தவர் இவர் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில். தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல.
இருந்த போதும் மனுதாரர் தமிழ்நாட்டை சார்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தரவு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மீன் வாரிய பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார்.
தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தமிழக அரசு தமிழகத்தில் வேலை செய்யக்கூடிய அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது ஆனால் மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த “பச்சை தமிழன்” என்பதால் இவருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு அரசு ஊழியர்களின் பணி வரன்முறைக்கு எதிராக உள்ளது எனவே தனி நீதிபதி பிரபித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மின்வாரிய தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நீதிபதி பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் தமிழ் வழியில் கல்வி கற்கவும் இல்லை தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறவும் இல்லை இவ்வாறு உள்ள சூழலில் எவ்வாறு பணியில் நீடிக்க முடியும் மேலும் CBSE பாடத்திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலைக்கு வந்துவிடுவது தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் CBSE கல்வியில் படித்தால் அரசில் வேலை கேட்காதீர்கள்,
தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில்,தமிழ் மொழி,பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.அரசின் பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது.இங்கு மட்டும் அல்ல, எந்த மாநிலத்தில் அரசு பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின் , மொழி தெரிந்து இருக்க வேண்டும்.தெரிய வில்லை எனில் என்ன செய்வது. என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை உயர்த்தியது – தமிழ்நாடு அரசு