இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, STR 51 படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அஸ்வத் மாரிமுத்துவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படம் சிம்புவின் 51வது படமாகும். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
#AshwathMarimuthu Recent 👀
– What you saw in the movie #Dragon 🐉 and #OMK will be in this movie too.
– This movie will be a must-see for fans.
– Vintage STR mood My kind of Film#SilambarasanTR #STR51 #ThugLifepic.twitter.com/2fQZIoPFzt— Movie Tamil (@MovieTamil4) March 10, 2025
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “STR 51 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். 2026 இல் வெளியாகும்” என்று அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், “சிம்பு என்னுடைய படத்தில் நடிப்பதை விட அவரை நான் நிறைய படங்களில் பார்க்க விரும்புகிறேன். STR 51 ஸ்கிரிப்ட் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் மட்டும் இருக்கிறது. இந்த படம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களில் உங்களுக்கு என்ன பிடித்ததோ அது இருக்கும். சிம்புவிடம் நீங்கள் எதையெல்லாம் ரசித்தீர்களோ அதுவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.