வீர தீர சூரன் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமின் 62 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தினை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இவர் இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகிய வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. மேலும் அதே நாளில் இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.