Homeசெய்திகள்சினிமாதனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களை பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ளன. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்குவதாக சொல்லப்படுகிறது. தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி!ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் பிரசாத் லேபில் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது பாலாஜி தரணீதரன், இந்த படத்தின் கதைக்கேற்ப விஜய் சேதுபதியிடம் உடல் எடையை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக விஜய் சேதுபதி உடல் எடையை குறைத்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இருந்து ரசிகர்கள் விஜய் சேதுபதி லுக் எப்படி இருக்கும்? என்பதை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ