மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஏன் குறைவாக இருக்கிறது என திருப்பூர் எம் பி சுப்பராயன் கேள்வி ஏழுப்பியுள்ளாா்.
திருப்பூர் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவருமான சுப்பராயன், தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 18 கோடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 3 கோடி அளிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடுகிறார்.
மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி குறைவாக இருப்பதாகவும், இது மக்களவைத் தொகுதிகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளாா். தமிழகத்தை பாஜக அரசு குறிவைத்து அடிப்பதாகவும், அரசின் இரட்டை எஞ்சின் ஆட்சி (Double Engine Government) பயனளிக்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக, இருதரப்பு மக்களையும் அழைத்து பேசி, நிலையான தீர்வு காண வேண்டியது ஒன்றிய அரசின் கடமை எனவும், கலவரத்தைத் தோற்றுவித்தவர்கள் தான் அதை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்