நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல மரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சௌந்தர்யா 90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அந்த வகையில் இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து இவர் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். அது மட்டும் இல்லாமல் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்காக ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ளார். இப்படி இருக்கும் சூழலில் தான் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது அண்ணன் அமர்நாத்துடன் விமானத்தில் பயணம் செய்யும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் சௌந்தர்யா. இந்த தகவல் ரசிகர்களையும் திரைப்பிரபலங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் சௌந்தர்யா இவ்வுலகை விட்டு மறைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் தற்போது அவருடைய மரணம் விபத்து இல்லை, கொலை என்று கூறி ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது நடிகை சௌந்தர்யாவின் கொலை, நிலப்பிரச்சனை காரணமாக நடந்திருக்கலாம் என்றும் அவருடைய கொலைக்கும் நடிகர் மோகன் பாபுவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் ஜல்பள்ளி கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் நிலத்தை மோகன் பாபு கைப்பற்ற நினைத்தபோது, சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதேசமயம் அவரின் மரணத்திற்கு பிறகு சட்ட விரோதமாக அந்த நிலத்தை மோகன் பாபு கைப்பற்றியுள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.