Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!

ஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த எடுத்த ஆயுதத்தையே, தற்போது ஸ்டாலினை வீழ்த்த தர்மேந்திர பிரதான் பயன்படுத்துவதாகவும் பத்திரிகையாளர் சமஸ் எச்சரித்துள்ளார்.

samas
samas

தர்மேந்திரி பிரதான் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ள சூப்பர் முதல்வர் என்ற கருத்தாக்கத்தின் பின்னணி மற்றும் அதனுள் மறைந்திருக்கும் சூழ்ச்சிகள் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சமஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கல்வி நிதியை கேட்டு மக்களவையில் போராடிய தமிழக எம்.பி-க்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்து மிகவும் தீவிரமானதாகும். நாடு குடியரசானது முதல் மத்திய அரசுக்கு இந்தியை மக்களிடம் கொண்டுசெல்வது என்பது ஒரு செயல்திட்டமாக உள்ளது. வெவ்வவேறு காலகட்டங்களில் கல்விக்கொள்கைகளில் அதை மறைமுகமாகவும், நேரடியாகவும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. 1964ல் தமிழ்நாட்டில் உருவான இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டமானது, இந்தி திணிப்பை ஓரளவுக்கு மேல் கொண்டுசெல்லக்கூடாது என்று மத்திய அரசுக்கு உணர்த்தியது. 1950ல் நாடு குடியரசானபோது நாட்டில் இந்திதான் அலுவல் மொழியாக இருக்கும், இந்தி பேசாத மாநிலங்களின் வசதிக்காக 15ஆண்டு காலம் வரை மட்டும் அதனுடன் ஆங்கிலம் நீடிக்கும் என அரசமைப்பு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு எதிராக 1964ல் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற்றது.

அதன் விளைவாகவே இனிமேல் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கு நாட்டில் ஆங்கிலத்தை இவ்வளவு வலுவாக நிறுவியதற்கு அடிப்படையாக அமைந்து. அதற்கு பின்னர் 1967ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது. ஒரு அரை நூற்றாண்டு காலமாகியும் காங்கிரசால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததற்கு அது ஒரு காரணமாக உள்ளது. அது அடுத்தடுத்து மத்தியில் வந்த அரசுகளுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையை ஏற்படுத்தியது.

தற்போது பாஜக – திமுக இடையே நடைபெறும் விஷயங்கள் என்பது அரசு அல்லது நிர்வாக ரீதியான மோதலாக பார்க்க முடியாது. சித்தாந்த ரீதியான மோதலாகத்தான் பார்க்க வேண்டும். காரணம் என்ன என்றால் சித்தாந்த ரீதியாக மும்மொழி கொள்கை சிறந்தது என்றும், இருமொழிக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டது என்றும் சொல்கிற இடத்திற்கு பாஜக நகரும்போது இதனை சித்தாந்த ரீதியாக அணுகுகிறார்கள் என்பது உறுதியாகிறது. சித்தாந்த மோதலின் உச்சமாகவே மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு எம்.பிக்களை பார்த்து நாகரீகமற்றவர்கள் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். வெளியே வந்து அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறினார் என்றாலும் கூட அது அதிர்ச்சிகரமான விஷயமாகும்.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு, முதலமைச்சர் ஆகியோர் ஒப்புகொண்டனர். கடந்த மார்ச் மாதம் இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிலையில், ஒரு சூப்பர் முதலமைச்சர் இதனை தடுத்துவிட்டார் என்று தர்மேந்திர பிரதான் கூறுகிறார். அப்படி என்றால் முதலமைச்சருக்கு மேலே இன்னொருவர் இருக்கிறார் என்கிறார். நான் இந்த கருத்தை தர்மேந்திர பிரதானின் பின்னணியுடனும், ஒடிசா உடனும் இணைத்து பார்க்கிறேன். அப்படி பார்த்தால்தான் இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை புரியவரும். 1997ல் பிஜு பட்நாயக் மறைந்து போகிறார். அதுவரைக்கும் நவீன் பட்நாயக்கிற்கும் அரசியலக்கும் சம்பந்தமில்லை. ஆதரவாளர்கள் அவரை அழைத்து வந்து பிஜு ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்கள். 1998 மக்களவை தேர்தலுக்கு பின்னர் 2000 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுகிறார். பல்லஹாரா தொகுதியில் கூட்டணிக்கட்சியான பாஜகவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் வெற்றி பெற்ற செய்திதை அறிந்து தன்னுடன் இருந்த பத்திரிகையாளர் ரூபன் பானர்ஜியிடம் சொல்கிறார், தனக்கு பிரச்சினை உருவாகியுள்ளது என்று. தர்மேந்திர பிரதான், அப்போது தான் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு ஆகினார். 2024ல் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி வீழ்த்தப்பட்டு, பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூபன் பானர்ஜி இதனை நினைவு கூறுகிறார். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைய முக்கியமானவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் விளங்கினார். அதனை 24 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் நவீன் பட்நாயக் என்று ரூபன் பானர்ஜி கூறினார்.

Photo: Odisha CM Official Twitter Page

நவீன் பட்நாயக் தனது 24 வருட ஆட்சிக்காலத்தில், பின்தங்கிய நிலையில் இருந்த  ஒடிசாவை வருமையில் இருந்து மீட்டார். அவர் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாது. இன்றளவும் ஒடிசா மக்களுக்கு அவர் மீது பெரிய அதிருப்தி கிடையாது. ஆனாலும் எப்படி வீழ்த்தப்பட்டார் என்றால், அவருக்கு மேலாக ஒரு சி.எம். செயல்படுகிறார் என்கிற கதையாடலை மிக வெற்றிகரமாக கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவினர் கட்டமைத்தார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகை பாண்டியன், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றினார். அவர் தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். பட்நாயக்கிற்கு அனைத்து விஷயங்களிலும் உறுதுணையாக இருக்கிறார். அவர் நாளடைவில் சூப்பர் முதல்வராகிவிட்டார் என்கிற கதையை உருவாக்கியதன் வாயிலாக பாஜகவினர் அடிமட்டத்தில் 2 விஷயங்களை பரப்ப தொடங்கினார்கள். முதலாவது ஒடிசா முதல்வராக உள்ள பட்நாயக்கிற்கு உடல்நிலை சரியில்லை. மற்றொருன்று இந்த முடிவுகள் அனைத்தும் அதிகாரிகள் தான் எடுக்கிறார். முதலமைச்சருக்கு எதுவும் தெரியவில்லை என்று கதைகளை பரப்பினார்கள். மேல்மட்டத்தில் கார்த்திகை பாண்டியனை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இப்படியாக செயல்பட்டதன் வழியாகவே ஸ்திரமான கோட்டையை உடைத்தார்கள். அந்த உத்தி ஒடிசாவில் வென்றது. அந்த உத்தியை வகுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் தர்மேந்திர பிரதான். அதனால் இன்றைக்கு தர்மேந்திர பிரதான் பேசக்கூடியதை, நாடாளுமன்ற விவாதத்தில் தவறி வந்த வார்த்தை என்று பார்க்கவில்லை. மாறாக இதற்கு பின்னால் ஒரு தெளிவான அரசியல் கதையாடல் உருவாக்கம் இருக்கிறதாக பார்க்கிறேன்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பிம்பத்தை உடைப்பது முக்கியம் என கருதும் பாஜகவினர், அதனை நோக்கி நகர்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் யாரை குறிவைத்து இந்த கதைகளை உருவாக்குகிறார்கள் என்பதை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம். ஸ்டாலினுடைய பிம்பம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது அன்றைக்கு திமுக – அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 4 சதவீதம் தான். அதிமுக மீதான 10 ஆண்டுகால அதிருப்தி, எடப்பாடி பழனிசாமி பாஜகவினரிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு மேலோங்கி இருந்தது. மக்களிடம் நிலைத்து இருந்தது. இந்த இடத்தில் இருந்துதான் ஸ்டாலின் உருவாகி வருகிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் அவர் மீதான மதிப்பு என்பது தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் உயர்ந்துள்ளது. தேசிய அளவிலான இதழ்கள், சிஓட்டர் போன்ற கருத்துக் கணிப்புகளில் ஸ்டாலின் மதிப்பு உயர்வாக காட்டப்படுகிறது. நாட்டிலேயே பாஜகவை உறுதியாக எதிர்க்கக்கூடிய மாநில முதலமைச்சர்களில் ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.

இதனை கடந்து கட்சி தலைவராக, அவருடைய நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். இது கட்சியில் ஸ்டாலினின் கரத்தை உறுதியாக வைத்திருக்கிறது. மற்றொருபுறம் பல்வேறு உறசல்கள் இருந்தாலும் கூட்டணியை சிதறாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளார். ஸ்டாலின் நிர்வாகம் மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு மோசமான நிர்வாகி என்கிற பெயரை அவர் எடுக்கவில்லை. அதேபோல தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டும் கிடையாது. இந்த 2 விஷயங்களில் ஸ்டாலின் சுதாரித்துக்கொண்டு கப்பலை நகர்த்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த 4 ஆண்டுகளில் ஸ்டாலினின் பிம்பம் மேலே உயர்ந்துள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில் நம் கண் முன்னே தெரிவது ஸ்டாலின், எடப்பாடி, விஜய், அண்ணாமலை, சீமான் என 5 அணிகள் தென்படுகிறது. இவற்றில் ஸ்டாலினுடன், மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்தால் அவரது பலம், அவரது கணம் என்னவென்று தெரியும். அவருக்கு பதிலாக எந்த ஒரு பெயரை மாற்றிப் போட்டாலும், அந்த கணம் மாறிவிடும். அப்போது அவருடைய கணத்தை குறைக்க வேண்டிய தேவை உள்ளது. அதை நோக்கி குறிவைப்பது என்பதை இன்றைக்கு அவர்கள் செய்யவில்லை.

ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டிற்குள்ளாகவே அது உருவாக்கப்பட்டது. 2023 கால கட்டத்தில் இந்த பேச்சு உச்சத்திற்கு சென்றது. அன்றைக்கு முதலமைச்சரின் ஜெயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ்-ஐ குறிவைத்து, இந்த பேச்சுக்கள் எழுந்தன. அவர் சூப்பர் முதல்வராக செயல்படுவதாக உருவாக்கினார்கள். இதன் நுட்பத்தை உணர்ந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கவனத்தை திசை திருப்புவதற்காக உதயச்சந்திரனை நிதித் துறை செயலாளராக மாற்றினார். அவர் தன்னுடைய செயலாளர்கள் வட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியதன் வாயிலாக விமர்சனங்கள் அடிபட்டு போனது. இப்போது தர்மேந்திர பிரதான் மீண்டும் கையில் எடுப்பது அந்த விஷயத்தை வைத்துதான் என்று எனக்கு தோன்றுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ