Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி நியமனம்!  சி.வி.எம்.பி.எழிலரசனுக்கு புதிய பொறுப்பு!

திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி நியமனம்!  சி.வி.எம்.பி.எழிலரசனுக்கு புதிய பொறுப்பு!

-

- Advertisement -

திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி, கொள்கைப் பரப்புச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோரை நியமித்து,  கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

திமுக - அண்ணா அறிவாலயம்

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த பொறுப்பை, கட்சியின் மாணவர் அணி தலைவராக இருந்த இரா.ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஊடக விவாதங்களில் திமுக சார்பில் கலந்துகொள்வோர் பட்டியலையும் திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம்.செல்வகணபதி, கே.என்.அருண்நேரு , தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகிய பேச்சாளர்களும் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் கலந்துகொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ