Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

-

- Advertisement -

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரியை ஜிபிஆர்எஸ் கருவியின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மதுரையில் இருந்து கடத்தி  செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு சொந்தமான மினி லாரியை தனது வீட்டின் முன்பு நேற்று இரவு நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது மினிலாரியை காணவில்லை. இது குறித்து உடனடியாக மேலூர் காவல் நிலையத்தில் ராஜீவ் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மினி லாரியில் இருந்த ஜிபிஆர்எஸ் கருவி மூலம் விசாரணை செய்ததில் அந்த மினிலாரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கடந்து செல்வது தெரிய வந்தது.

இதனை அடுத்து அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை அருகில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கிப் பிடித்த போலீசார், மினி லாரியை கடத்தி வந்த பெரம்பலூர் வெங்கடேசன் (27)  என்பவரை கைது செய்தனர்.  வெங்கடேசன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வாகன திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராஜாராம் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொகுதி மறுவரையறை விவகாரம்: சித்தராமையா, ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக நேரில் அழைப்பு!

MUST READ