Homeசெய்திகள்க்ரைம்பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!

-

- Advertisement -

கோவை, பொள்ளாச்சி மீன்கரை பகுதியில்  இளைஞர்கள் 8 பேர் போதை ஊசிகள் பயன்படுத்தி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!

பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசிகள் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்கரை பகுதியில் சில இளைஞர்கள் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு இருந்த 8 பேர் போதை ஊசிகள் மூலம் போதை அடைந்தது தெரியவந்தது.

கைதானவர்கள் தாராபுரத்தை சேர்ந்த இமாம் அலி, கோட்ரோடு பகுதியை சேர்ந்த ஷேக், மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்த சலீம், ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த நந்தகுமார், குமரன் நகரை சேர்ந்த பாபா இப்ராகிம், முஸ்தப்பா, முகமது அலி, ரத்தினகுமார் ஆகியோர் ஆவர். விசாரணையில், பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமாரிடம் இருந்து போதை மருந்து கொண்டுபோய்ச் செய்து, அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!

MUST READ