- Advertisement -
தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு டெண்டர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்காக அரசு டெண்டர் அழைத்துள்ளது. மத்திய அரசு விதித்த 2026 காலக்கெடுவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவும் பணிக்காக ரூ.20,000 கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்ட இந்த டெண்டர் அறிவிப்பின் மூலம், மின் கணக்கீட்டில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும், மின் பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் மீட்டர்கள், மின்சார பயன்பாட்டை தானியங்கி முறையில் கணக்கீடு செய்யும் தொழில்நுட்பத்துடன் வரவிருக்கின்றன.