Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக அறிமுகமாகும் ரவி மோகன்.... ஷூட்டிங் எப்போது?

இயக்குனராக அறிமுகமாகும் ரவி மோகன்…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

நடிகர் ரவி மோகன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குனராக அறிமுகமாகும் ரவி மோகன்.... ஷூட்டிங் எப்போது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது ஜீனி, கராத்தே பாபு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி மோகன். மேலும் சில படங்களில் கமிட் ஆகி வரும் ரவி மோகன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி ரவி மோகன் இயக்க உள்ள புதிய படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் சொல்லப்பட்டது. இயக்குனராக அறிமுகமாகும் ரவி மோகன்.... ஷூட்டிங் எப்போது?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகும் எனவும் 2025 ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலும, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் ரவி மோகன், யோகி பாபு ஆகியோர் இணைந்து கோமாளி, சைரன் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ