பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் மூன்று கதாநாயகிகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி டிராகன் திரைப்படமும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐகே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன், சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இப்படத்தில் மமிதா பைஜுடன் இணைந்து அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.