Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?

கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?

-

- Advertisement -

தர்பூசணி என்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. ஏனென்றால் இது இயல்பிலேயே நீர் சத்துக்களை கொண்டவை. அத்துடன் இதில் தேவையான அளவு வைட்டமின்கள் தாது பொருட்கள் ஆகியவைகளும் அடங்கியுள்ளன.கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?

தர்பூசணி என்பது 90% நீர்ச்சத்துக்களை கொண்டிருக்கிறது. எனவே கோடை காலத்தில் இதனை சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். உடல் உஷ்ணம் குறையும். மேலும் தர்பூசணியில் உள்ள லைகோபீன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் அர்ஜினின் போன்ற அமினா அமிலங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. அடுத்தது தர்பூசணியில் வைட்டமின் சி அதிகம் இருக்கும் காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. தர்பூசணியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?

இது தவிர தர்பூசணியில் மெக்னீசியம், கால்சியம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இது தசை தளர்ச்சியை குறைக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள நீர் சத்து மற்றும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும். எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகளும் தர்பூசணியை அளவாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் தர்பூசணியை கோடை காலத்தில் தினமும் எடுத்துக் கொள்ளலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. தர்பூசணியை தினமும் சாப்பிடலாம். ஆனால் மிதமான அளவில் சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?ஏனென்றால் எந்த ஒரு பொருளுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதுபோல தர்பூசணியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கக்கூடும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ