Homeசெய்திகள்அரசியல்'ஹெவி'யாக ஈர்த்த மோடி..? பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்..!

‘ஹெவி’யாக ஈர்த்த மோடி..? பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்..!

-

- Advertisement -

கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலக அளவில் தலைசிறந்த பளுதூக்குதல் வீரர்களில் ஒருவரான, சகோதரர் சதீஷ் சிவலிங்கம் , மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் கவரப்பட்டு, தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அனுதாபத்தை சேர்த்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களான பிரவீன் கந்தெல்வால்- சாந்தினி சௌக் தொகுதி, ஹர்ஷ் மல்ஹோத்ரா- கிழக்க டெல்லி தொகுதி, சுபான்சூரி ஸ்வராஜ் – புது டெல்லி தொகுதி, மனோஜ் திவாரி – வடகிழக்கு டெல்லி தொகுதி, யோகேந்திர சாண்டேலியா- வடமேற்கு டெல்லி தொகுதி, திருமதி கமல்ஜீத் ஷெராவத் – மேற்கு டெல்லி தொகுதி, ராம்வீர் சிங் பிதூரி – தெற்கு டெல்லி தொகுதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணியை முற்றிலுமாக துடைத்தெறிந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தேசியச் சிந்தனை மிக்க இளைஞரான சகோதரர் சதீஷ் சிவலிங்கம் அவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்காக பங்கேற்றவர். காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் என, ஆறு தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர். அர்ஜுனா விருது வென்றவர். பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்.

சகோதரர் திரு சதீஷ் சிவலிங்கம் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில், தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


யார் இந்த சதீஷ் சிவலிங்கம்..?                                                                                   கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றவர்.

சதீஷ் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் இதே எடைப் பிரிவில் 149 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 179 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் எடைப் பிரிவில் மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றிருந்தார். ஸ்னாட்ச் பிரிவில் அவர் 149 கிலோ எடையைத் தூக்கியதே விளையாட்டு சாதனையாகத் தொடர்கிறது. கோல்ட் கோஸ்டில், அவர் மொத்தம் 317 கிலோ (144 கிலோ + 173 கிலோ) எடையைத் தூக்கி இருந்தார்.

 

MUST READ