தமிழக பட்ஜெட் லோகோவில் உள்ள ரூபாய் சின்னத்தை ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தால் அரசு மாற்றியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில், ‘₹’ சின்னம் ‘ரூ’ சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் ‘இந்தி திணிப்பு’ தொடர்பாக திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் அரசு இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நாணய சின்னத்தை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல் முறை.
ரூபாய் சின்னமான ₹ அதிகாரப்பூர்வமாக ஜூலை 15, 2010 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மார்ச் 5, 2009 அன்று அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வடிவமைப்புப் போட்டியைத் நடத்தி இந்த லோகோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய நெறிமுறைகள், கலாச்சாரத்தை பிரதிபலிப்பதை உள்ளடக்கிய ஒரு சின்னத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு பொதுப் போட்டி நடத்தப்பட்டு, அந்த லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தி திணிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், தமிழக பட்ஜெட்டில் இருந்து ₹ சின்னத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழ்நாடு மறுத்துவிட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம், தமிழ் பேசும் மக்களை இந்தி கற்க கட்டாயப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட காவி கொள்கை. கல்வித் துறையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்பதால், தேசிய கல்விக் கொள்கையை 2020- ஐ நாங்கள் எதிர்க்கிறோம். சமூக நீதியான இடஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை. தொழிற்கல்வி என்ற பெயரில் சாதி அடிப்படையிலான கல்வியை மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது” திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.
தமிழ்நாடு தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது. 1937 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அப்போதைய சென்னை மாகாண அரசு, அங்குள்ள பள்ளிகளில் இந்தி படிப்பை கட்டாயமாக்கியது. நீதிக்கட்சி, பெரியார் போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிராகப் பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தக் கொள்கை 1940-ல் ஒழிக்கப்பட்டது. ஆனால், இந்தி எதிர்ப்பு உணர்வுகள் நீடித்தன.
1968 ஆம் ஆண்டு மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழ்நாடு அதை எதிர்த்தது. இது இந்தியைத் திணிக்கும் முயற்சி என்று கூறியது. அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை தலைமையில், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதன் கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்