Homeசெய்திகள்சினிமா'பராசக்தி' படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரல்..... அதிர்ச்சியில் படக்குழு!

‘பராசக்தி’ படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரல்….. அதிர்ச்சியில் படக்குழு!

-

- Advertisement -

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.'பராசக்தி' படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரல்..... அதிர்ச்சியில் படக்குழு!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் தற்போது பராசக்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் தவிர அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகின்றன. 'பராசக்தி' படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரல்..... அதிர்ச்சியில் படக்குழு!இதற்கிடையில் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி அந்த வீடியோவில் ரவி மோகனின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது ரவி மோகன் இப்படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கிறார் என்பது தெரிகிறது. இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் லீக் ஆனது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

MUST READ