கயடு லோஹர் டிராகன் படத்தின் BTS காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி டிராகன் எனும் திரைப்படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கயடு லோஹரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். டிராகன் திரைப்படம் தான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் என்றாலும் தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளார் கயடு லோஹர்.
The film that has changed my life!
Dragon ♥️ pic.twitter.com/ZqGFSDtlZ2
— Kayadu Lohar (@Kayadu__Lohar) March 14, 2025
அந்த வகையில் இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார். இதைத்தொடர்ந்து அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கயடு. இந்நிலையில் இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “என்னுடைய வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் டிராகன்” என்று குறிப்பிட்டு டிராகன் படத்தின் BTS காட்சிகளை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.