HomeBreaking Newsவிமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா'..... கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’….. கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

-

- Advertisement -

விமல் நடிக்கும் பரமசிவன் பாத்திமா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா'..... கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

நடிகர் விமல் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பரமசிவன் பாத்திமா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து ‘சார்’ படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீபன் சக்கரவர்த்தி இதற்கு இசையமைத்திருக்கிறார். எம். சுகுமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். வீரசமர் இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்ற புவன் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது மதம் தொடர்பான கதைக்களம் போல் தெரிகிறது. அதன்படி இந்த ட்ரெய்லரில் மதம் மாற்ற முயற்சிப்பவர்களை தாக்கி பேசும் வசனங்கள் பல இடம்பெற்றுள்ளன. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ