Homeசெய்திகள்அரசியல்ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

-

- Advertisement -

சென்னையில் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கழகம் அறிவிக்க உள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர்,பொதுசெயல்லார்,பொருளாளர், மாவட்ட செயலாளர் என உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப திட்டம்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது – தொல்.திருமாவளவன்

MUST READ