ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த 2023 வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து வெளியான டங்கி திரைப்படமும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.
இதன் பின்னர் நடிகர் ஷாருக்கான் கிங் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படம் தொடர்பான தகவல்கள் ஆரம்பத்தில் வெளியாகும் போது சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் கிங் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதே போல் கரீனா கபூரும் ஷாருக்கானுடன் இணைந்து அசோகா, கபி குஷி கபி கம், டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.