Homeசெய்திகள்சினிமா'டெஸ்ட்' படம் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை .... நயன்தாரா பேச்சு!

‘டெஸ்ட்’ படம் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை …. நயன்தாரா பேச்சு!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா, டெஸ்ட் திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.'டெஸ்ட்' படம் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை .... நயன்தாரா பேச்சு!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது டாக்சிக், டியர் ஸ்டுடென்ட்ஸ், ராக்காயி, மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் மாதவன், சித்தார்த் ஆகியோருடன் இணைந்து டெஸ்ட் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தினை தமிழில் விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா ஆகிய படங்களை தயாரித்த சசிகாந்த் இயக்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். இப்படமானது வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடிகை நயன்தாராவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

இதன் மூலம் நயன்தாரா, இதில் குமுதா என்ற ஆசிரியையாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அடுத்தது நடிகை நயன்தாரா டெஸ்ட் திரைப்படம் குறித்து, “காதல் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் டெஸ்ட் திரைப்படம். இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பார்ப்பதை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ