Homeசெய்திகள்தலையங்கம்மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர் 

-

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் முடிந்து விட்டது. இந்த குறுகிய காலக்கட்டத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை என்று சாதனைகளின் எண்ணிக்கை நீண்டுக் கொண்டே போகிறது.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

சட்டமன்றத்தில் “தமிழ்நாடு” என்ற பெயரை உச்சரிக்க ஆளூநர் மறுத்த போது அந்த கன நேரத்தில் முதலமைச்சர் அதற்கான எதிர்வினையை ஆற்றிய விதம், தைரியத்தை தமிழக மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு செயலும் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களிடம் நேரடியாக செல்வாக்கை பெற்று வருகிறது.

ஆனால், “இலவு மரத்தடியில் காத்திருந்த கிளியை போல்” கடந்த பத்தாண்டு காலமாக திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்த கட்சியின் அடிமட்ட பொருப்பாளர்கள், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

நமது கட்சி ஆட்சியில் இருக்கிறதே என்கிற தெம்பு இல்லை. அவர்களின் முகத்தில் மகிழச்சி இல்லை. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்தது நாங்கள், ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை என்று தொண்டர்கள் புலம்பி தீர்க்கிறார்கள்.

அப்படி என்னதான் நடக்கிறது?

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருக்கின்ற மின்சாரத்துறையில் சாதாரண தொண்டனால் வீட்டிற்கு வேண்டிய ஒரு மின் இணைப்பு பெற முடியவில்லை.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

அந்த துறையில் பணிப்புரிகின்ற அதிகாரிகள் ஒரு மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் நடுவதற்குக் கூட லட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்க வரவேண்டியவர்கள் வருவதில்லை. அலுவலகத்தில் இருந்துக் கொண்டே கூடுதலாகவோ, குறைவாகவோ தவறான கணக்கை எழுதுகிறார்கள்.

அதன் பின்னர் அலுவலகத்தில் இருந்துக் கொண்டே மின் இணைப்பு துண்டித்தல்(DC) செய்து விடுகிறார்கள். ஆனால் வீட்டில் மின்சாரம் எரிந்துக் கொண்டிருக்கும். ஒருவருடம் கழித்து உங்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. நீங்கள் மின்சாரத்தை திருடி இருக்கிறீர் என்று மிரட்டி லட்சக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். இது மின்சார வாரியம் செய்கின்ற வழிப்பறி என்றே கூறலாம். இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

மேலும், அமைச்சர் செந்தில் பாலஜியிடம் உள்ள மதுவிலக்கு துறை முழுவதும் இப்போதும் அதிமுகவினர் பிடியில் தான் இருக்கிறது. சென்னை, சென்னை புறநகர், தாம்பரம், ஆவடி, செங்கலபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் அனைத்து கடைகளும் கடந்த ஆட்சியில் நடத்தியவர்களே இப்போதும் நடத்துகிறார்கள்.

அவர்கள் கடந்த ஆட்சியில் அதிமுக கரை வேட்டியும், சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்தார்கள். தற்போது கருப்பு சிவப்பு வேடடியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தையும் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான் மாற்றம் அடைந்திருக்கிறது. இந்த விற்பனைக்குள் வட்டம், நகரம் என்று எந்த கட்சிக்காரனுக்கும் எந்த பயனும் இல்லை. “அனைத்தும் அவன் செயல்” என்பதுபோல், அனைத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல். இதற்காக காத்திருந்த திமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

உள்ளாட்சித்துறை தேர்தல் 

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அடுத்தது நான் மேயர், நீ துணை மேயர், அவர் சேர்மேன்,நான் வைஸ் சேர்மேன், நான் கவுன்சிலர் என்று ஒரு பெரும் தொண்டர் படையினர் கனவு உலகில் காத்திருந்தனர். தேர்தலும் வந்தது. அங்கே தான் மாவட்ட அமைச்சர்களின் ஆட்டம் ஆரம்பித்தது.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

கட்சியின் உண்மையான விசுவாசிகளை ஓரங்கட்டினார்கள், சீனியர் நிர்வாகிகளை கட்டம் கட்டினார்கள். தனக்கும் தன் வாரிசுகளுக்கும் உண்மையாக நடந்து கொள்ளக்கூடிய அடிமைகளை தேர்வு செய்தார்கள். அவர்கள் தான் கவுன்சிலர்கள். அதில் சிறப்பாக சேவை செய்யக் கூடியவர்கள் மண்டல சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டார்கள். “கண் இருந்தும் குருடாக, காதிருந்தும் செவிடாக இருப்பவர்களும், ஆகாயத்தில் வெள்ளை காக்காய் பறக்கிறது பார்” என்றால் ஆமாம் மாவட்டம் என்ற தலயாட்டி பொம்மைகளை மேயராகவும் சிம்மாசனத்தில் அமர வைத்து அந்த பதவியின் மாண்பையே குலைத்துவிட்டனர்.

அப்படி அமர்த்தப்பட்டவர்தான் சென்னை மேயர் பிரியா, சென்னை போன்ற ஒரு பெரும் மாநகராட்சியில் படித்த, ஆளுமை மிக்க ஒருவரை தேர்ந்து எடுத்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர் சேகர் பாபுவின் அதிகாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடத வகையில் பிரியா என்ற விபரம் அறியாத  பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் அந்த பதவிக்கான சிறப்பை மறந்து விளையாட்டு பிள்ளையை போல் காரில் தொங்கிக் கொண்டு போகிறார்.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

ஆவடி மேயர் உதயகுமாரின் நிலைமை பரிதாபத்திற்குறியது. மாநகராட்சிக்குள் என்ன நடக்கிறது? எத்தனை அதிகாரிள் பணிபுரிகிறார்கள்? எந்த அதிகாரி மாற்றத்தில் சென்றார், வந்தார் என்று எதுவும் தெரியாது. கையெழுத்து போடச்சொன்னால் போடுகிறார். கைநாட்டு வைக்கச் சொன்னால் வைக்கிறார். சொல்வதை செய்கிறார். அவர் சொந்தமாக சிந்திக்கவோ, செயல்படவோ கூடாது என்று அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறார். இப்படிப்பட்ட உள்ளாட்சி பிரமுகர்கள்தான் மாநிலம் முழுவதும் அதிகமாக இருக்கிறார்கள்.

அதனால் கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் என்ன பாதிப்பு? வேலைகள் நடக்கிறதா இல்லையா என்று கேட்க்கலாம். ஆம்… வேலைகள் நடைபெறுகிறது. அது அமைச்சர் சொல்லும் வேலை. அமைச்சர் கைகாட்டுபவர்களுக்கு வேலை, அமைச்சர் சொந்தகாரர்கள் சொல்பவர்களுக்கு வேலை, அமைச்சருக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு வேலை என்று இதுபோன்ற வேலைதான் நடைபெறுகிறது. உருபடியாக வேறு எந்த வேலையும் நடைபெறுவதில்லை.

மன உளச்சலில் திமுக தொண்டர்கள் - கண்டு கொள்வாரா முதல்வர் 

மேலும், திமுக தொண்டர்களோ, வட்ட கழக நிர்வாகிகளோ அல்லது பொதுமக்களோ வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு பட்டா வாங்க முடியவில்லை. மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெறமுடியவில்லை. அனைத்து திசைகளிலும் அமைச்சர்களின் தலையீடு, திரும்பும் பக்கமெல்லாம் அமைச்சர்களின் வாரிசுகளின் அதிகாரம் என்ற மோசமான நிலையே இருந்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம், செயல்பாடு ஒவ்வொன்றும் மக்களிடம் நேரடியாக செல்கிறது. கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா தலைவர்கள் போல் மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும் தலைவராக மாறி வருகிறார். ஆனால் கீழ்மட்டத்தில் அவருடைய புகழுக்கும், பெயருக்கும் கேடு ஏற்படும் வேலை தான் நடந்து வருகிறது என்பது எதார்த்தமான உண்மை. இதனை சரி செய்யாவிட்டால் திமுகவிற்கு வருங்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

MUST READ