வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.
வீட்டை கட்டுமுன் பணத்தை வசூலித்து விட்டு கட்டுமான நிறுவனங்களின் தாமதம் காரணமாக, வீடுகள் உரிய நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், வங்கிகள் கட்டாய இஎம்ஐ கேட்டு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, வீட்டு உரிமையாளர்கள் குழு ஒன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “எந்தவொரு நிறுவனத்தையும் மோசமானதாகவோ அல்லது நன்னடத்தை கொண்டதாகவோ நாங்கள் சான்றளிக்கப் போவதில்லை” என்று இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்த நீதிபதி சூர்யா காந்த் கூறினார்.
“நாங்கள் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்துவோம். அது தெளிவாகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அழுகிறார்கள். எங்களால் அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது. ஆனால், அவர்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியும். மிகவும் பயனுள்ள ஒன்றை விரைவில் செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜூலை 2024-ல் ஒரு முக்கிய தீர்ப்பில், தேசிய தலைநகர் டெல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க பணம் கொடுத்தும் அவர்களிடம் வீடுகளை ஒப்படைகாத நிலையிலும் அவர்களுக்கெதிராக வங்கிகள் இஎம்ஐ வசூல் உட்பட எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.