Homeசெய்திகள்சினிமாஅமேசான் பிரைமில் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... எப்போது தெரியுமா?

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ …. எப்போது தெரியுமா?

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அமேசான் பிரைமில் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... எப்போது தெரியுமா?

நடிகர் தனுஷின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அறிமுக நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இப்படம் வெளியான அதே நாளில் டிராகன் திரைப்படமும் வெளியான காரணத்தால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வசூலிலும் சரிவை சந்தித்தது. அமேசான் பிரைமில் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... எப்போது தெரியுமா?ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் இணையத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ