நடிகை ஜோதிகா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக சொல்லப்படுகிறது.நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து விஜய், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில்தான் நடிகை ஜோதிகா, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த திரைப்படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார். புனிதமான காதல் கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் தான் திரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் முதலில் ஜோதிகாவை அணுகினராம். ஆனால் ஜோதிகா மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக 96 படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக திரிஷா நடித்தாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வருங்காலத்தில் நடிகை ஜோதிகா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.