Homeசெய்திகள்கேள்வி & பதில்திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

-

என். கே. மூர்த்தியின் பதில்கள். 

பிரத்திவி ராஜ் – பாலப்பட்டு

கேள்வி– சரியான பட்டிக்காட்டான் என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?

பதில்- பட்டணத்தில் படித்தவன் ஒரு வாலிபன் பட்டிக்காட்டுக்கு போனான். ஒரு பெரியவர்கிட்டே ஏங்க, அரசம்பட்டுக்கு எந்த வழியா போகனும்-னு கேட்டான். அந்த ரோடு வழியா போகனும் தம்பின்னு வழி காண்பித்தார். அந்த ஊருக்கு போக எவ்வளவு நேரமாகும்-னு பட்டணத்து தம்பி கேட்டாரு, அதற்கு பெரியவர் பேசாம நடந்து போன்னாரு.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?
 

அரசம்பட்டுக்கு போக எவ்வளவு நேரமாகும்-னு கேட்டேன். அதான் பேசாம நடந்து போன்னு சொல்றேன்ல!

அந்த தம்பியும் பேசாம பதினைந்து இருபதடி தூரம் நடந்தார். பெரியவர் இப்ப, தம்பியை கூப்பிட்டு, தம்பி நீ அரசம்பட்டு போக முக்கால் மணி நேரமாகும்பா என்றார். அந்த தம்பி எரிச்சலடைந்து ஏய்யா, நீ என்ன பைத்தியமா? முக்கால் மணி நேரம் ஆகும் ன்றதை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே? ன்னு கேட்டார்.

அதற்கு பெரியவர், அது எப்படிப்பா சொல்றது? நீ என்ன வேகத்தில் நடக்கறேன்னு பார்க்கத்தான் முதல்ல பேசாம நடன்னேன். கொஞ்சம் நடந்ததும் உன் வேகம் புரிஞ்சு, முக்கால் மணி’ன்னு சொன்னேன். முதல்லேயே ஏன் சொல்லலை?ன்னு நீ முட்டாள் தனமா கேள்வி கேட்டுட்டு, என்னை பைத்தியம்ங்கறேன்னாரு.
இப்ப சொல்லுங்க யார் பட்டிக்காட்டான்.

சதீஷ் ஆவடி

கேள்வி- காவல்துறை வேலை நிறுத்தம் செய்தால் எப்படி இருக்கும்?

பதில்- “மாமுல்” வாழ்க்கை பாதிக்கும்.

சன்முகம். ஆவடி
கேள்வி- நீங்கள் ஏன் சார் அதிமுக -வை எதிர்க்கிறீர்கள்.

பதில்- என் நிலைபாடு அதிமுகவை எதிர்ப்பது அல்ல. திமுக-அதிமுக ஆகிய இரணடு கட்சிகள் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை. திமுக அது தொடங்கிய காலத்தில் இருந்து கொள்கை மாறாமல் பயணம் செய்கிறது. அதிமுக சில நேரங்களில் மாநில மக்களின் நலன்களில் கவனம் செலுத்தும்.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

பல காலங்களில் மத்திய அரசு சொல்படி கேட்டு தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்கும். எப்படி இருந்தாலும் அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை. அதிமுக இல்லை என்றால் பாஜக உள்ளே புகுந்து ஆபத்தை விளைவிக்கும் என்பது என் நிலைபாடு.

துரை- சங்கராபுரம்
கேள்வி- எதற்கெடுத்தாலும் பெரியார் மண் என்கிறீர்களே, அப்படி என்ன சாதித்து விட்டார் பெரியார்?

பதில்- ஒரு வரலாற்று சம்பவம் சொல்கிறேன். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள்(தேவரடியார்கள்) இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை என்று சொல்லலாம்.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் விபச்சாரிகளாக செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

சென்னை மாகான முதலமைச்சராக சத்தியமூர்த்தி அய்யர் இருந்தார். அப்போது டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார்.

சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பனகள் ஒன்றாக சேர்ந்து இதை எதிர்த்தனர்.

இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால். தேவதாசி என்பது தேவர் அடியாள், அதாவது தெய்வத்திற்கு தொண்டு செய்வது. இதை எதிர்ப்பது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று சட்டசபையில் கூறினர். மேலும் தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து டாக்கர் முத்துலட்சுமி அம்மையார் ஆலோசனை கேட்டார். “சட்டமன்றத்தில் இப்படி எல்லாம் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும்” என்று டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் ” நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்” என்று செய்தியை சொல்லி அனுப்பி வைத்தார்” பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்திற்கு சென்றார்.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?அப்போது முதலமைச்சர் சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். “தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.” என்றார்.

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பார்ப்பனர்களைப் பார்த்து “தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க சாதி பெண்கள் கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்கமான புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.

அதனால் அந்தத் தொண்டை இதற்கு மேல் உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது” என்றார்.

இதைக் கேட்ட சத்தியமூர்த்தி அய்யர் வாயடைத்து போனார். இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது எல்லாம் பெரியார் என்ற போராளியால் நடந்தது.

ஸ்டாலின்- பட்டாபிராம்
கேள்வி- மண்ணின் மைந்தர் என்று மார்தட்டிக் கொள்பவர்களைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்- நான் மண்ணின் மைந்தன் என்று பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதரை நேசிப்பதற்கு அவருடைய உறவு காரராக இருக்க வேண்டும் என்பது எப்படி அவசியமில்லையோ, அதேபோன்று ஒரு ஊரை நேசிக்க அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. மற்றப்படி மண்ணின் மைந்தன் என்பது ஏமாற்று வேலை.

ரூபன்- திருவள்ளூர்
கேள்வி- சுயமரியாதை இயக்கத்தின் சாதனை என்ன?

பதில்- “மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு” என்று உணர்த்தியது.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

மனதில் ஆழமாக வேறூன்றி உள்ள அடிமை எண்ணத்தை ஒழித்தது. இது சுயமரியாதை இயக்கத்தின் சாதனை.

ஆனால், இப்போது மீண்டும் அடிமை புத்தி வளர்ந்து வருகிறது.

சரவணன்- ரெடில்ஸ்
கேள்வி- திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

பதில்- தற்போதைய நிலையில் பார்க்கும் போது பெரியதாக ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆனால், கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசும்போது அந்த வித்தியாசத்தை நகைச்சுவையாக விளக்கினார்.

“நீதி”க்கு முன்பு ‘அ’போட்டால் என்ன வரும்?
மக்கள் சொன்னார்கள்” அநீதி”

“நியாயத்திற்கு “முன்னால் ‘அ’ போட்டால்?
மக்கள் சொன்னார்கள்” அநியாயம்”

“சுத்தம்”முன்னாடி ‘அ’ போட்டால்?
மக்கள்;”அசுத்தம்” என்றார்கள்.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

மீண்டும் கலைஞர் கேட்டார்” யோக்கியன்” முன்னாடி ‘அ’ போட்டால்?
மக்கள்: “அயோக்கியன்”.
இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு ‘அ’ போட்டது வேண்டுமா? ‘அ’ போடாதது வேண்டுமா?
மக்கள் சொன்னார்கள் ‘அ’ போடாதது தான் வேண்டும்.

அப்போது கலைஞர் சொன்னார்,
திமுக”விற்கு முன்னால் அவர்கள் ‘அ’ போட்டிருக்கிறார்கள். அது வேண்டுமா? வேண்டாமா? என்றார்.

இதை படிக்காம போயிடாதீங்க !

MUST READ