Homeசெய்திகள்அரசியல்‘கோவத்த குறைச்சுக்கோங்க…' வேல்முருகனை சமாதானப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

‘கோவத்த குறைச்சுக்கோங்க…’ வேல்முருகனை சமாதானப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

-

- Advertisement -

கடந்த வாரம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று முழக்கங்களை எழுப்பினார். அப்போது அவருக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு கடுமையான சில வார்த்தைகளைக் கூறினார். இதற்கு பதிலடியாக வேல்முருகனும், சேகர்பாபுவுக்கு எதிராக கேள்விகளை கேட்டார்.

Velmurugan mkstalin

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து, வேல்முருகன் வரம்பு மீறுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகரிடம் கூறினார். திமுக கூட்டணி கட்சி தலைவர் ஒருவருக்கும், திமுகவின் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஆவேசப்பட்டது அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியது. வெளியில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் திமுக சீனியர் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீதும், திமுக அமைச்சர்கள் நடந்து ள்ளும் விதம் பற்றியும் வேதனையோடு பேட்டியளித்தார்.

இதனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேல்முருகன் சட்டமன்றம் செல்லவில்லை. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து நேற்று வேல்முருகன் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது காலையில் சபை தொடங்கும் முன்பே சபாநாயகர் அறைக்கு சென்றிருந்தார் வேல்முருகன். அங்கே அமைச்சர் எ.வ.வேலுவும் இருந்தார்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் விவகாரங்களை கையாள்கிறவரான அமைச்சர் எ.வ.வேலு, சபாநாயகர் அறையிலேயே வேல்முருகனிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்.அதன்பிறகு சட்டமன்றத்தில் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு சென்றார் வேல்முருகன்.

"கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை"- த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வேல்முருகன் தன்னுடைய தரப்பு நியாயங்களை விளக்கியுள்ளார். முதலமைச்சரும் சபையில் அன்று நடந்தது பற்றி குறிப்பிட்டு,‘கோவத்த குறைச்சுக்கோங்க. உங்க மேல எனக்கு உரிமை இல்லையா?’ என்று தன்மை காட்டி இருக்கிறார். அதன் பிறகே வேல்முருகன், முதலமைச்சர் அறையில் இருந்து வெளியே வந்து சட்டமன்றத்தில் கலந்து கொண்டார். இன்றும் வழக்கம்போல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். இந்நிலையில், 28ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

MUST READ