சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நந்தன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் மை லார்ட், ஃப்ரீடம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. மேலும் கலக்கலான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்றுதான் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.