பொதுவாக நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அந்த வகையில் முந்திரி என்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே குழந்தைகள் அடிக்கடி இந்த முந்திரிகளை சாப்பிடுவதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. முந்திரியில் வைட்டமின் இ, பி6, மெக்னீசியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஒமேகா-3 கொழுப்புகள் போன்றவை இருக்கிறது. மேலும் முந்திரியில் உள்ள தாமிரம் மற்றும் இரும்பு சத்து ஆகியவை ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க உதவுகிறது. அடுத்தது இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை பலப்படுத்தவும் பயன்படுகிறது. குறிப்பாக இது மனசோர்வை குறைக்கும்.
எனவே முந்திரியை பவுடராக்கி பாலுடன் கலந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு நெய்யில் வறுத்து கொடுக்கலாம். செயற்கை இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த முந்திரியை சாப்பிட்டால் இயற்கையான இனிப்பின் நிறைவு கிடைக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் இந்த முந்திரியை சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைய தொடங்கும். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 முந்திரி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது முந்திரியை அளவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். முந்திரியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனை ஏற்படும் என சொல்லப்படுகிறது. மேலும் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்த முந்திரிகளை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
- Advertisement -