Homeசெய்திகள்சினிமாதடைகளை தாண்டி திரைக்கு வரும் 'வீர தீர சூரன்'........ ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!

தடைகளை தாண்டி திரைக்கு வரும் ‘வீர தீர சூரன்’…….. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.தடைகளை தாண்டி திரைக்கு வரும் 'வீர தீர சூரன்'........ ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சேதுபதி, சித்தா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. தற்போது இவரது இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம், துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தடைகளை தாண்டி திரைக்கு வரும் 'வீர தீர சூரன்'........ ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் இன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓடிடி உரிமம் தொடர்பான பிரச்சனையில் B4U நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்தின் மீது தொடர்ந்து வழக்கில் இந்த படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமான தீர்வை எட்டிருப்பதனால் டெல்லி உயர் நீதிமன்றம் இப்படத்திற்கு எந்தவித தடையும் இல்லை எனவும், படத்தை வெளியிட அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ” வீர தீர சூரன் திரைப்படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியாகும். என் அப்பா என்றும் மூன்று முறை திரையரங்கிற்கு சென்று படம் ரிலீஸாகவில்லை என்று வந்துவிட்டார். அப்போதிலிருந்து விக்ரம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே படக்குழு சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலையிலிருந்து ஆரவாரத்துடன் இந்த படத்தைக் காண காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கும், இந்தப் பிரச்சனையில் என்னுடன் இருந்த திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை உலக நண்பர்களுக்கும் நன்றி. இன்று மாலை முதல் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகும். கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று படத்தை பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ