Homeசெய்திகள்சினிமாஅடுத்த பாகத்துடன் விரைவில் வரோம்... மகிழ்ச்சி வெள்ளத்தில் கதாநாயகன் சூரி!

அடுத்த பாகத்துடன் விரைவில் வரோம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் கதாநாயகன் சூரி!

-

- Advertisement -

‘விடுதலை’ படத்தை பெரும் வெற்றி அடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காமெடியனாக கலக்கி வந்த சூரி தற்போது விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தனது நேர்த்தியான நடிப்பு மூலம் அந்த ஐயங்களை எல்லாம் சூரி அடித்து உடைத்தார். ஒரு இடத்தில் கூட காமெடியன் சூரி எட்டிப் பார்க்கவில்லை. நேர்மையான வெகுளித்தனம் நிறைந்த காவலராக கண் முன் தோன்றினார்.

soori
soori

வெற்றிமாறன் தான் அடிக்கும் ஓவ்வோரு பந்தையும் சிக்ஸ்ர் ஆக்கி வருகிறார். விடுதலை அதில் புது வரவு. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசையும் பாடல்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.

படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து சூரி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Soori

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ