வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகாவில் வடசேரி, மகாதேவப்பட்டணம், புள்ளிக்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி 11 இடங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 66 இடங்களில் ஆழ்துறையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியாது என்றும்
விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று மாலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.