Homeசெய்திகள்உலகம்நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பரபரப்பு!

நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பரபரப்பு!

-

நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பெரும் பரபரப்பு!

பல டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.

நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பரபரப்பு!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2022ம் ஆண்டு  அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். “நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.

நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பரபரப்பு!

ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. டுவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

2013 இல் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியான Dogecoin கரன்சியின் ஆதரவாளர் எலான் மஸ்க். டெஸ்லா Dogecoin ஐ வணிகப் பொருட்களுக்கான கட்டணமாக ஏற்றுக்கொள்கிறது என்று முன்னதாக குறிப்பிட்டார்.

நீல நிற குருவிக்கு பதில் நாய் ட்விட்டரில் பரபரப்பு!

SpaceX விரைவில் இதனை ஏற்றுக் கொள்ளும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இணையத்தள இடைமுகத்தில் Dogecoin சின்னமான நாயின் படம் திடீரென தோன்றிய பிறகு Dogecoin மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்தது.

லோகோ ஏன் மாற்றப்பட்டது! என்று அதிகமான பயனர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதால், எலான் மஸ்க் அதற்கு பதில் கூறும் வகையில் இரண்டு ட்வீட்களை வெளியிட்டார்.

அவர் தனது இந்த நடவடிக்கைக்கு நகைச்சுவையாக படங்களை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் செயலியின் லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ