பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள நிதியை, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ற கோணத்தில் அரசு திட்டமிட வேண்டும் என, தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில், தமிழ் நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ”தமிழக அரசு 2023-ல் வெளியிட்ட அரசாணை எண் 20-ன்படி ஓராண்டுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருச்சி பார்வையற்ற மாணவியின் வழக்கு குறித்து ஓய்வு பெற்ற சென்னை நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகளை தோழமைக் கட்சிகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டமைப்பில் 8 அமைப்புகளை ஒன்றிணைத்திருப்பதாக கூறிய அவர்கள், 1500 ரூபாயாக வழங்கப்படும் ஓய்வூதியத்தை 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நியாய விலை கடைகளில் இலவசமாக மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கெண்டனர்.
தமிழக அரசு 2023-இல் வெளியிட்ட அரசாணை எண் 20-ன்படி ஓராண்டுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உறுதிமொழியை செயல்படுத்த வேண்டும் என்றும், அரசு பணியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்ட்டு வரும் போக்குவரத்துப் படி 2500 ரூபாயை இரட்டிப்பபாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது உணர்வுகளை தமிழ்நாடு அரசு ஏற்காத பட்சத்தில் மாநிலம் தழுவிய அளவிலான போராட்டம், வரும் 15-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல் துறையினரின் போக்கு, மாற்றுத்திறனாளிகளோடு அனுசரணையாக இல்லை என வருத்தம் தெரிவித்த அவர்கள், மாற்றுத் திறனாளிகளான தங்கள் மீது போலீசாரன் அணுகுமுறை சரியான அளவில் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வெறும் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள அரசு, தங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளை அரசு ஆராய வேண்டும் என்றும் தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
உயரமா வளர்ந்தது குற்றமா..? பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..!