போடு🔥 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னைக்கு செம ட்ரீட் இருக்கு!

இன்றைக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் தான்.

இன்று மட்டும் 5-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் ட்ரைலர்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஷன்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘ராவணக் கோட்டம்’ படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமன் சுகுமாரன் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாந்தனு கிராமத்து கதை களத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலமாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு சிம்பு வெளியிடுகிறார்.

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிகாச கதைக்களத்தைக் கொண்டுள்ள இந்தப் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாக வரும் திரைப்படம் ருத்ரன் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகி நடித்துள்ளார் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்திசை’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தின் டிரைலரை 8 தமிழ் சினிமா பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘யானை முகத்தான்’ என்ற படத்தின் டிரைலரும் இன்று வெளியாக இருக்கிறது.

Advertisement