“விஜயகாந்த் பிரச்சனை எனக்கு தெரியும், அவர் மீண்டு வர இதுதான் ஒரே வழி”… இயக்குனர் பிரவீன் காந்தி!

விஜயகாந்த் மீண்டு வர இதுதான் ஒரே வழி என்று இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்த விஜயகாந்த் தற்போது தேமுதிக கட்சியின் தலைவராக இருக்கிறார். ஆனால் பெயருக்கு தான் அப்படி. உடல்நலம் சரியில்லாமல் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் இப்படி ஆக என்ன காரணம் என்பது பற்றி பேசியுள்ளார்.

“2015 ஜூலை மாதம், அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தார் இறந்தாரு. அதற்கு முன், அவர் நடமாடும் சிங்கமாக இருந்தார். ஆளுமை நிறைந்த தலைவர், நடிகர். தர்ம சிந்தனை கொண்டவர். நல்ல குணங்கள் நிறைந்தவர். குழந்தையா விளையாடுவாரு.

vijayakanth

நட்புக்கு உதாரணம் என்றால் அது ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் தான். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த பின், வடபழனியில் அவருடைய இடத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. நான் இறுதி மரியாதை செலுத்திவிட்டு நின்று கொண்டிருந்தேன். அங்கு வரும் வரை விஜயகாந்த் சார் நன்றாக தான் இருந்தார். அங்கு வந்து ராவுத்தர் உடலை பார்த்ததுமே, விஜயகாந்த் உடைஞ்சுட்டாரு.

தனக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் பண்ண ராவுத்தர் இறந்ததை அவரால் நம்பமுடியல. அன்னைல இருந்து தான் தான் அவர் குழம்பிப் போனாரு. ராவுத்தரின் கடைசி காலத்தில் அவருடன் விஜயகாந்த் நெருக்கமாக இல்லை. ‘நாம நெருக்கமாக இல்லாததால் ராவுத்தர் போயிட்டானோ’ என்கிற குற்ற உணர்வு தான், அவர் இப்படி ஆக காரணமாயிட்டு. இது யாருக்குமே தெரியாது. நான் பக்கத்துல இருந்து அதப் பார்த்தேன். அவருடன் தான், நான் அஞ்சலி செலுத்தினேன்.

தன் நண்பனை பிரிந்த வலி, அவர் மனசுல இருக்கு. அதை அவர் வெளியே தூக்கி போடவில்லை என்றால், விஜயகாந்த் சார் கடைசி வரை இப்படி தான் இருப்பார். அவர் மீண்டு வர ஒரே ஒரு வழி தான். ராவுத்தர் மாதிரி இருக்கிற ஒருத்தரை கூட்டிட்டு வந்து வந்து, ‘ராவுத்தர் சாகல, உயிரோடு தான் இருக்கிறான்’ என்று அவரை நம்ப வைக்க வேண்டும். இது மேல் நாட்டு மனோதத்துவ சிகிச்சை” என்று பேசியுள்ளார்.

Advertisement