Homeசெய்திகள்சினிமாப்ரீ புக்கிங்கில் அசால்ட் பண்ணும் 'குட் பேட் அக்லி'!

ப்ரீ புக்கிங்கில் அசால்ட் பண்ணும் ‘குட் பேட் அக்லி’!

-

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்தின் 63வது படமான இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ப்ரீ புக்கிங்கில் அசால்ட் பண்ணும் 'குட் பேட் அக்லி'!இந்த படத்தில் அஜித் தன்னுடைய விண்டேஜ் கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் ரசிகர்களுக்காக பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது. இவ்வாறு மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் குட் பேட் அக்லி படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரிலேயே ரசிகர்களை மிரள வைத்தார். எனவே இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 10) உலகம் முழுதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும், டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 20 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்படம் ஒரே நாளில் ரூ. 50 கோடியை தட்டி தூக்கி விடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.ப்ரீ புக்கிங்கில் அசால்ட் பண்ணும் 'குட் பேட் அக்லி'!குட் பேட் அக்லி படத்தில் திரிஷா, கார்த்திகேயா தேவ், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ