Homeசெய்திகள்சினிமாஏன் இப்படி பண்றாங்க... அஜித்தை சுத்தி என்ன நடக்குது?.... ஷாக் கொடுத்த பிரசன்னாவின் பதில்!

ஏன் இப்படி பண்றாங்க… அஜித்தை சுத்தி என்ன நடக்குது?…. ஷாக் கொடுத்த பிரசன்னாவின் பதில்!

-

- Advertisement -

கடந்த 2023 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஏன் இப்படி பண்றாங்க... அஜித்தை சுத்தி என்ன நடக்குது?.... ஷாக் கொடுத்த பிரசன்னாவின் பதில்!அஜித்தின் 63வது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி நாளை (ஏப்ரல் 10) வெளியாக உள்ள இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏன் இப்படி பண்றாங்க... அஜித்தை சுத்தி என்ன நடக்குது?.... ஷாக் கொடுத்த பிரசன்னாவின் பதில்!இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் நடைபெறவில்லை என்றும் பல கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது ஆதிக் ரவிச்சந்திரனைத் தவிர வேறு எந்த நடிகர்களும் இந்த படத்தை பற்றி பேட்டி கொடுக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில், “குட் பேட் அக்லி படத்தில் அத்தனை நடிகர்கள் நடிக்கும் யாருமே பேட்டி கொடுக்கல. அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் பேட்டி கொடுக்கலாமே” என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு ரசிகர் பிரசன்னாவை குறிப்பிட்டு, “என் பேட்டி கொடுக்கல?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பிரசன்னா, “ப்ரோ யாருமே கேட்கல. எனக்கும் ஒண்ணுமே புரியல” என்று பதிலளித்திருந்தார். இந்த பதில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் பிரசன்னா சிறிது நேரத்திலேயே இந்த பதிவினை டெலிட் செய்து விட்டார். ஏன் இப்படி பண்றாங்க... அஜித்தை சுத்தி என்ன நடக்குது?.... ஷாக் கொடுத்த பிரசன்னாவின் பதில்!ஆகையினால் ரசிகர்கள் பலரும், அஜித் படத்தை ப்ரொமோட் செய்யாமல் ஏன் இப்படி பண்றாங்க. அஜித்தை சுற்றி என்ன நடக்கிறது? என்று தங்களின் மனக்குமுறலை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் படத்தைப் பற்றி சில விஷயங்களை சொல்லி ஹைப் ஏற்றி விடுகிறார்கள். அதனாலேயே படம் பிளாப் ஆகிவிடுகிறது என்பதால் கூட படக்குழு இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் படத்திற்கு பிரமோஷன் தேவையில்லை, நல்ல படம் பண்ணவே இல்லை என்றாலும் வெற்றி பெறும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ