Homeசெய்திகள்தமிழ்நாடுமுகக்கவசம் அணிவது கட்டாயம்- அமைச்சர் மா.சு.

முகக்கவசம் அணிவது கட்டாயம்- அமைச்சர் மா.சு.

-

முகக்கவசம் அணிவது கட்டாயம்- அமைச்சர் மா.சு.

பொதுமக்கள் தாங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

ma subramanian

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் தயாரித்துள்ள 6 அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தும் விழா கலந்துகொண்டு அழகு சாதன பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் மருத்துவம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “டாம்ப்கால் மூலம் ஏற்கனவே 175 மருந்துகள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 6 வகையான அழகு சாதன் பொருட்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 198 கொரனோ பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்புகள் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

masu

அபராதம் விதித்து கட்டயம் முக கவசம் அணிவதை விட பொதுமக்கள் தாங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிவது அவசியம். தமிழகத்தில் தற்போது ஒரு நபர் தொற்று மட்டுமே பெரிய அளவில் கண்டறியப்படுகிறது , குழு பரவல் என்பது கண்டறியப்படவில்லை. கட்டாயப்படுத்தி தான் முக கவசம் அணிய வேண்டும் என்ற மனநிலைக்கு பொதுமக்கள் கொண்டு செல்லக்கூடாது” எனக் கூறினார்.

MUST READ